Seeking Accurate Information to Guide our Behaviours

Seeking Accurate Information to Guide our Behaviours

Seeking Accurate Information to Guide our Behaviours

Separating the wheat from the chaff

 

By Dr Santushi Amarasuriya, Clinical Psychologist and Senior Lecturer,
Department of Medical Humanities, Faculty of Medicine, University of Colombo 


We have seen people behave in various ways amidst the COVID-19 situation. On one extreme are those who think this is an over-reaction, generally considering the prevailing movement restrictions a nuisance to be subverted. On the other are those in high levels of distress getting ready for impending doom. This is a situation that is constantly evolving. Undoubtedly, this creates a sense of uncertainty and confusion about what to do and not. Therefore, we need a suitable compass to guide our behaviours. For this we must turn to accurate information to guide us. We are extremely fortunate to have a plethora of information sources at our finger tips, which enable us to be updated about what is going on across the globe in a matter of seconds. However, the downside of this sea of information is that some of it is uncontrolled and if we fall prey to it we can be misguided. In fact, the WHO has commented that the COVID-19 pandemic has led to a “massive infodemic”, where there has been an over-abundance of false information, and has even set up a 24/7 myth-busting hotline to monitor and respond to such misinformation.

https://www.who.int/emergencies/diseases/novel-coronavirus-2019/advice-for-public/myth-busters

We might sometimes fall prey to such false information traps because we want to make sense of this situation which is creating a sense of uncertainty and uncontrollability. We might want an explanation for what is going on, or to feel reassured that all will be okay and that we can do something to save ourselves, or be able to blame someone for it, or simply want quick answers and pay attention to the news that is most easily accessible. Some of us maybe more receptive to certain false information that feed into and confirm our already existing beliefs, leading to what is called a confirmation bias. e.g., someone who already believes in the benefits of a certain herb in treating the flu is more likely to believe claims about its efficacy in treating COVID-19. We might also be repetitively exposed to such false information or actively seek sources which provide it which ends up convincing us that this information is true! This is called an Illusory Truth Effect.

Such false information could

  • either make us even more panicked and distressed or falsely reassure us and make us more calm. Even if the latter might seem beneficial, both these reactions can misguide us and lead to dysfunctional and unhelpful behaviours;
  • trigger us to spread false information which ends up propagating a dysfunctional community response.

Here are a few questions you can ask yourself to ensure the accuracy of the information you use and pass onto others.

Do I need to spread this information now to ‘fight a fire’?

When we hear disturbing news we want to share it with our loved ones. This is a prosocial tendency stemming from our need to protect others from harm by transmitting information regarding impending dangers. This is an evolutionary mechanism and has helped in the survival of our species. However, this tendency can be very harmful if the information we pass on is false. Therefore, when confronted with some news you need to make a judgment on whether or not you give into this tendency immediately, or wait to verify the information before passing it on. For example, if a boy comes running down the road shouting “fire”, you might not have time to verify this message and it might be prudent to pass it on to those in the vicinity. However, if there is no immediate threat and no need for others to respond immediately, however ‘burning’ and emotionally distressing the content of the news might be, you need to stop in your tracks and first verify whether this news is accurate or not.

Have I checked the expertise of my source?

When judging the reliability of information you need to judge the reliability of its source. This will depend on the information you seek. For example, let us say your information sources are a family member at home vs a supervisor vs a University Professor vs an Epidemiologist. Whilst if your question is about the rations available at home a family member will be the best source of information, if it is about how to work from home during this time, your supervisor will know best about what is expected. However, when it comes to the current predictions regarding the trajectory of the corona virus, although both these individuals may have your best interest at heart, they are not good sources of information and you need to rely on the information provided by a qualified Epidemiologist when trying to understand the situation. Similarly, if you are searching the web you must check if the website is reliable. If it is maintained by an established health authority, it will be, but if it is a discussion forum, it might not.

Am I sure the “expert” is wearing a fitting hat?

You may hear statements and advice from several experts and renowned persons about what to do in a particular situation, but you must ensure that these experts are wearing their own hat and not that of another and are only providing advice within their area of expertise. Let us say in the previous example, the University Professor is a Professor in Psychology. This person might be able to comment on the psychological responses of people during a situation such as this but will not have the expertise to comment on the epidemiology of COVID-19.

Am I sure this is not false “expert news”?

We are also sometimes confronted with misleading information provided under the guise of being from renowned experts. Despite being under the name of a so-called expert you need to always check about the reliability of the source providing this information. If it is from a website, is it from a reliable one? If it is from a news source, is it mainstream, and what is their source? If it is provided by a reliable person what was their source? For example, your University Professor might have researched well about the situation and be able to share accurate information and also its source. If you are one of the links in a long chain of recipients of information, pass it on only if you trace the source as being definitely reliable.

Am I with the times?

Apart from checking the reliability of your source, you need to check the timeline of your information. We often have news of several years ago still circulating because we do not bother to check if the news is old. Even if this news was true then, it might not be so now because it is outdated. So a Situation Report on COVID-19 is relevant on a particular day, but not a few days later. So check the date before passing it on.

Have I cherry-picked the information?

When provided with information we have a tendency to focus on the distressing parts or that which feeds our preconceptions and biases. Therefore, when providing information to others we must avoid the trap of cherry-picking such information, because often when considered within the context of the larger picture, these same facts can take on a different meaning. This is similar in nature to “quote mining”, where a person’s views are quoted out-of-context, and thus, leads to a false or misleading perception of the facts. We are often faced with issues where certain excerpts of what experts said are quoted with the larger chunk of information missing, leading to misunderstanding of what was actually said. So we need to avoid doing this as otherwise one would be guilty of sensationalising information.

Have I separated speculation from fact?

There are many questions about COVID-19 that we still lack answers to. Scientists are working very hard to find its origin, how it spreads and how it could be treated. There are several academic debates and discussions about these issues and for some of these questions we still only have mere speculation or hypotheses. So let us say experts hypothesise that a certain drug might be effective in the treatment of COVID-19. This is still at the speculation stage and is not a fact. So we need to act responsibly in passing on this information and not make claims such as “a cure has been found for COVID-19” given the experts never told us so!

Do I need to become the broken information link?

Whenever you click the forward button on any piece of information, this action turns you into a source of information. This places a massive responsibility on you since, if you feed to others information that is not authentic, reliable and verified, you are then guilty of misguiding them. This means you need to practise a lot of control and restraint in this role of information transmission.

So if you have not verified the information you received, become the broken link in the chain of information transmission!

HERE ARE THE KEY TIPS TO FOLLOW

  • If it’s not urgent to pass the news right now to stop something bad happening……
    Stop
    and verify your message and source first
  • Check that your news is from an expert …….
    If not seek another appropriate source
  • Check that the expert has expertise on what is addressed…….
    Seek
    information from subject experts
  • Check that “Expert news” is actually from an expert…….
    Trace
    the source to be sure
  • Check if the news is current…….
    Stop
    circulating old news
  • Don’t extract only parts of the news…….
    Pass complete news
    to avoid misrepresentation and sensationalisation
  • Check if the news is fact or only speculation…….
    Present only facts
  • Be responsible for the news you pass…….
    Verify the news…..if not…..break the chain

නිවැරදි තොරතුරු සෙවීම තුළින් අපගේ හැසිරීම් පාලනය

“තිරිඟු දහයෙන් වෙන් කිරීම”

 

ආචාර්ය සන්තුෂි අමරසූරිය, සායනික මනෝවිද්‍යා හා ජ්‍යෙෂ්ඨ කථිකාචාර්ය,
වෛද්‍ය මානව ශාස්ත්‍ර දෙපාර්තමේන්තුව, වෛද්‍ය පීඨය, කොළඹ විශ්ව විද්‍යාලය


අපි COVID-19 තත්වය තුළ මිනිසුන්ගේ විවිධාකාර හැසිරීම් දකින්නෙමු. එක් අන්තයක සිටින්නේ මෙය පමණට වැඩි ප්‍රතිචාරයක් යැයි සිතන, පවතින සීමාකිරීම්වලින් ගැලවිය යුතු යැයි සිතන කාණ්ඩයකි; අනෙකෙහි සිටින්නේ අධික ආතතියකට පත්ව ඉදිරියේදී විනාශයක් සිදු වේයැයි සිතා එයට සූදානම් වන කාණ්ඩයකි. මෙය නිරන්තරයෙන් වෙනස් වන තත්වයකි. මෙය කළ යුතු හා නොයුතු දේ ගැන අවිනිශ්චිතතාවක් සහ ව්‍යාකූලත්වයක් ඇති කරයි. එබැවින් අපගේ හැසිරීම්වලට මග පෙන්වීමට සුදුසු මාලිමාවක් අවශ්‍ය වේ. මේ සඳහා නිවැරදි තොරතුරු වෙත යොමු විය යුතුය. අද දින තොරතුරු ඉතා පහසුවෙන් අප වෙත ළගා කර ගැනීමට හැකි වීම අපේ ඉමහත් වාසනාවකි. තත්පර කිහිපයක් තුළ ලොව පුරා සිදුවෙමින් පවතින දේ පිළිබඳව දැනුවත් වීමට අපට හැකියාවක් ලැබී ඇත. කෙසේ වෙතත්, මෙම තොරතුරු සාගරයේ අවාසිය නම්, එයින් සමහරක් ව්‍යාජ වන අතර ඒවා කිසිම පරීක්ෂාවකින් තොරව අප අතරේ සංසරණය වීමයි. මෙවන් තොරතුරුවලට අප ගොදුරු වුවහොත් අප නොමඟ යා හැකිය. ලෝක සෞඛ්‍ය සංවිධානය COVID-19 වසංගතය “දැවැන්ත infodemic” (තොරතුරු වසංගත)තත්වයකට, එනම් ව්‍යාජ තොරතුරු විශාල ප්‍රමාණයක් සංසරණය වීමට, තුඩු දී ඇතැයි ප්‍රකාශ කර ඇත. මෙය පාලනය කිරීමට හා මිත්‍යා තොරතුරු බිඳ දැමීමට ඔවුන් 24/7 දුරකථන අංකයක්ද වෙන් කර තිබේ.

https://www.who.int/emergencies/diseases/novel-coronavirus-2019/advice-for-public/myth-busters

අපි සමහර විට එවැනි ව්‍යාජ තොරතුරුවලට ගොදුරු වන්නේ අවිනිශ්චිතතාව සහ පාලනය කළ නොහැකි යැයි හැඟීමක් ඇති කරවන මෙම තත්වය ගැන අවබෝධයක් ලබා ගැනීමට අපට අවශ්‍ය වන නිසාය. සිදුවෙමින් පවතින දේ පිළිබඳ පැහැදිලි කිරීමක් ලබා ගැනීමට හෝ තත්වය හොඳ අතක ඇති බවට හෝ මින් බේරීමට යමක් කළ හැකි බවට සහතික කර ගැනීමට හෝ මේ තත්වය ගැන යමෙකුට දොස් පැවරීමට හෝ ඉක්මන් පිළිතුරු ලබා ගැනීමට හෝ ඇති අපේ අවශ්‍යතාව නිසා අප මෙවන් ව්‍යාජ තොරතුරුවලට ගොදුරු විය හැකි ය. සමහරවිට අප තුළ දැනටමත් පවතින විශ්වාසයන් පෝෂණය කරන සහ සනාථ කරන ඇතැම් ව්‍යාජ තොරතුරු වලට අප වැඩි ප්‍රවණතාවයක් දැක්විය හැක (Confirmation Bias). උදා., උණ රෝගයට ප්‍රතිකාර කිරීමේදී යම් ඖෂධ පැළෑටියක ඇති ප්‍රයෝජන ගැන දැනටමත් විශ්වාස කරන අයෙක් COVID-19 ට ප්‍රතිකාර කිරීමේදීත් එම පැළෑටිය ප්‍රයෝජනවත් යැයි කියන ප්‍රකාශන විශ්වාස කිරීමට වැඩි ඉඩක් ඇත. අප නැවත නැවතත් එවැනි ව්‍යාජ තොරතුරුවලට ගොදුරු වීමට හෝ අප එය සපයන ප්‍රභවයන් සෙවීමට ඉඩ ඇති අතර එමඟින් මෙම තොරතුරු සත්‍ය යැයි අපට සිතේ! (Illusory Truth Effect)

එවැනි ව්‍යාජ තොරතුරු,

  • අප තව තවත් භීතියට, පීඩාවට හෝ ව්‍යාජ ලෙස සැනසවීමකට පත් කළ හැකි ය. මෙවන් තොරතුරු අප නොමඟ යවන අතර නුසුදුසු ප්‍රතිචාරවලට අප යොමු කිරීම ද සිදු කරයි.
  • අප නොසිතූ ලෙස ප්‍රජාව තුළ සංසරණය වීමෙන් ප්‍රජාව තුළ නුසුදුසු ප්‍රතිචාර ඇති විය හැකි ය.

ඔබ භාවිතා කරන හා අන් අයට සපයන තොරතුරුවල නිරවද්‍යතාවය සහතික කර ගැනීමට ඔබ තමාගෙන්ම ඇසිය හැකි ප්‍රශ්න කිහිපයක් මෙන්න.

මා මෙම තොරතුර ප්‍රමාදයකින් තොරව වහාම ව්‍යාප්ත කළ යුතුද?

පීඩාකාරී පුවතක් ඇසු විට එය අපගේ සමීපතයන් සමඟ බෙදා ගැනීමට අපි තැත්  කරන්නෙමු. මෙය අන්‍යයන් හානිවලින් ආරක්ෂා කර ගැනීමට අප තුළ තිබෙන ප්‍රවණතාවයෙන් පැන නගින යහපත් සමාජීය හැසිරීමකි. මෙය පරිණාමීය යාන්ත්‍රණයක් වන අතර අපගේ පැවැත්මට එය ඉවහල් වී තිබේ. කෙසේ වෙතත්, අප විසින් ලබා දෙන තොරතුරු අසත්‍ය නම් මෙම ප්‍රවණතාව ඉතා හානිකර විය හැකි ය. එමනිසා, යම් පුවතක් ඇසූ විට ඔබ මෙම ප්‍රවණතාවට වහාම ඉඩ දෙන්නේද, නැතිනම් එය අන් අයට දීමට පෙර එය සත්‍යාපනයට ලක් කරන්නේද යන්න විනිශ්චය කළ යුතුය. උදාහරණයක් ලෙස, ළමයෙක් “ගින්නක්” කියා කෑගසමින් පාරේ දුවන්නේ නම්, ඔබට මෙම පණිවිඩය සත්‍යාපනය කිරීමට කාලය නැති විය හැකි අතර එය අවට සිටින අයට දැනුම් දීම හොඳ ම තීරණය විය හැකිය. නමුත් ක්ෂණික තර්ජනයක් නොමැති නම් හෝ පුවතට අනෙක් අය වහාම ප්‍රතිචාර දැක්වීමට අවශ්‍ය නොවේ නම්, එය කෙතරම්  ‘දැවෙන’ සහ මානසිකව ඔබ කලබලයට පත් කළත්, ඔබ එය නිවැරදිද යන්න පළමුව තහවුරු කර ගත යුතුයි.

තොරතුරු දෙන්නාගේ විශේෂඥතාව මා තහවුරු කර තිබේද? 

තොරතුරුවල විශ්වාසනීයත්වය තීරණය කිරීමේදී එය පවසන්නාගේ විශ්වාසනීයත්වය විනිශ්චය කළ යුතුයි. මෙය ඔබ සොයන තොරතුරු මත රඳා පවතී. උදාහරණයක් ලෙස, ඔබේ තොරතුරු ප්‍රභවයන් පවුලේ සාමාජිකයෙකු, ඔබේ වැඩ බලන නිලධාරියා, විශ්ව විද්‍යාල මහාචාර්යවරයකු හා වසංගත රෝග විශේෂඥයෙකු කියා සිතමු. ඔබගේ ප්‍රශ්නය නිවසේ දැනට ඇති කෑම වර්ග ගැන නම් පවුලේ සාමාජිකයෙකු හොඳම තොරතුරු ප්‍රභවය වනු ඇත. ප්‍රශ්නය මෙම කාලය තුළ නිවසේ සිට වැඩ කරන ආකාරය ගැන නම්, ඔබේ වැඩ බලන නිලධාරියා ඒ පිළිබඳව හොඳින් දැන ගනු ඇත. මෙම පුද්ගලයින් දෙදෙනාම ඔබට බෙහෙවින් හිතවත් වුවත්, ප්‍රශ්නය කොරෝනා වෛරසයේ පැතිරීම හා ඉදිරියට බලාපොරොත්තු විය යුතු දේ පිළිබදව නම්, ඔවුන් හොඳ තොරතුරු ප්‍රභවයන් නොවන අතර වසංගත රෝග විශේෂඥයා සපයන තොරතුරු ලබා ගත යුතු ය. එසේම ඔබ වෙබ් අඩවියෙන් තොරතුරු ලබා ගන්නේ නම් ඔබේ ප්‍රභවය විශ්වාසදායක දැයි පරීක්ෂා කර යුතුය. එය සෞඛ්‍ය අධිකාරියක් විසින් නඩත්තු කරන්නේ නම්, එය එසේ වනු ඇත. නමුත් එය සාකච්ඡා සංසදයක් නම්, එසේ නොවිය හැක.

විශේෂඥයා තම විෂයට අදාළ කරුණු ගැන පමණක් උපදෙස් දෙන බව මට විශ්වාසද? 

මෙම තත්වය තුළ කළ යුතු දේ පිළිබඳව විශේෂඥයන්ගේ සහ කීර්තිමත් පුද්ගලයන්ගේ උපදෙස් අපට නිතර අසන්නට ලැබේ. නමුත් මොවුන් තමන්ට අදාළ කරුණු ගැන පමණක් උපදෙස් දෙන බවට අප සහතික කර යුතුය. පෙර උදාහරණයේ දී, විශ්ව විද්‍යාල මහාචාර්යවරයා මනෝ විද්‍යාව පිළිබඳ මහාචාර්යවරයකු  යැයි  සිතමු. මෙවැනි තත්වයක් තුළ මිනිසුන්ගේ මනෝචර්යාත්මක ප්‍රතිචාර ගැන අදහස් දැක්වීමට මොහුට හැකි විය හැකි නමුත් COVID-19 හි වසංගත විද්‍යාව පිළිබඳව අදහස් දැක්වීමට විශේෂඥ දැනුමක් නොතිබෙනු ඇත.

තොරතුරු “විශේෂඥ ප්‍රකාශන” යැයි ව්‍යාජ ලෙස දක්වා නැතැයි මට විශ්වාසද?

විශේෂඥයාගේ මුවාවෙන් ලබා දී ඇති ව්‍යාජ තොරතුරු ද අපට ඇතැම් විට ලැබේ. තොරතුරක් විශේෂඥයෙකුගේ නම යටතේ ප්‍රකාශ වී තිබිය ද, මෙම තොරතුර සපයන ප්‍රභවයේ විශ්වාසනීයත්වය පිළිබඳව ඔබ සැමවිටම පරීක්ෂා කළ යුතුය. එය වෙබ් අඩවියකින් නම්, එය විශ්වාසදායක වෙබ් අඩවියකින්ද? එය ප්‍රවෘත්ති ප්‍රභවයකින් නම්, එය ප්‍රධාන ස්ථාපිත එකක්ද, ඒවායේ ප්‍රභවය කුමක්ද? එය විශ්වාසදායක පුද්ගලයෙකු සපයන්නේ නම් ඔහුගේ ප්‍රභවය කුමක්ද? උදාහරණයක් ලෙස, අප සැලකු විශ්වවිද්‍යාල මහාචාර්යවරයා මෙම තත්වය පිළිබඳව හොඳින් පර්යේෂණ කර නිවැරදි තොරතුරු සහ එහි මූලාශ්‍රය සැපයීමට හැකියාව තිබෙන්නට ඇත. ඔබ දිගු තොරතුරු දාමයක සබැඳියක් නම්, එය අන් අයට දිය යුත්තේ ඔබ තොරතුරු ප්‍රභවය නිසැකවම විශ්වාසදායක යැයි සොයා ගන්නේ නම් පමණි. 

මා  කාලීන ද? 

ඔබේ ප්‍රභවයේ විශ්වාසනීයත්වය පරීක්ෂා කිරීමට අමතරව, ඔබේ තොරතුරු කාලීන දැයි පරීක්ෂා කළ යුතුය. මීට වසර කිහිපයකට පෙර පුවත් තවමත් සංසරණය වෙමින් පවතින්නේ ඒවා පැරණි දැයි පරීක්ෂා කිරීමට අප උනන්දු නොවන බැවිනි. මෙම පුවත එවකට සත්‍යයක් වුවද, දැන් එය යල් පැන ගිය ඇති නිසා එසේ නොවිය හැකි ය. එබැවින් COVID-19 පිළිබඳ තත්ව වාර්තාවක් යම් දිනයක අදාළ වුවත් දින කිහිපයකට පසුව එය අදාළ නොවේ. එබැවින් එය අන් අයට දීමට පෙර දිනය පරීක්ෂා කරන්න.

මා තොරතුරු අසම්පුර්ණ ලෙස, යම් දේ පමණක් තෝරා ගෙන ප්‍රකාශ කර තිබේද? 

අපගේ පූර්ව නිගමන සහ බිය/සැක පෝෂණය කරන තොරතුරු කෙරෙහි වැඩියෙන් අවධානය යොමු කිරීමේ ප්‍රවණතාවක් අපට ඇත. අන් අයට තොරතුරු ලබා දීමේදී එවැනි ආකාරයට යම් යම් කරුණු පමණක් එළිදැක්වීමෙන් අප වැළකී සිටිය යුතුය. මන්ද බොහෝ විට සියලුම තොරතුරු එකට සලකා බැලීමේදී මෙම කරුණු වෙනත් අර්ථයක් ගනී. මෙය යමෙකු කී කරුණු අල්පයක් පමණක් උපුටා ගෙන ඒවා අන් අය නොමඟ යවන ආකාරයට එළි දැක්වීම හා සමානය. විශේෂඥයින් පැවසූ කරුණුවල  සමහර උපුටාගැනීම්, ඔවුන් සැපයූ සම්පුර්ණ තොරතුරු රහිතව සපයා, සත්‍ය වශයෙන්ම ඔවුන් පැවසූ දේ වරදවා වටහා ගැනීමට තුඩු දුන් අවස්ථා ඔබ දකින්නට ඇත. මෙම ක්‍රියාවන් තොරතුරු අතිශයෝක්තියට පත් කළ හැක. එබැවින් අප මේ වරදින් වැළකී සිටිය යුතුය.

අනුමාන කිරීම් හා සත්‍ය තොරතුරු මා වෙන් කර තිබේද?

COVID-19 පිළිබඳ ප්‍රශ්න බොහොමයකට අප සතුව පිළිතුරු තවමත් නොමැත. එහි මූලාරම්භය, එය පැතිරෙන ආකාරය සහ එයට ප්‍රතිකාර කළ හැකි ආකාරය සොයා ගැනීමට විද්‍යාඥයෝ වෙහෙස දරමින් සිටිති. මෙම කරුණු පිළිබඳව ශාස්ත්‍රීය විවාද සහ සාකච්ඡා බෙහෙවින් ඇති අතර, සමහර ප්‍රශ්න සඳහා අපට තවමත් ඇත්තේ අනුමාන කිරීම් හෝ උපකල්පන පමණි. උදාහරණයක් වශයෙන් COVID-19 සඳහා යම් ඖෂධයක් ප්‍රයෝජනය විය හැකි යැයි විශේෂඥයන් උපකල්පනය කළා යැයි  අපි සිතමු. මෙය තවමත් උපකල්පනය ක්  වන අතර සත්‍යයක් නොවේ. එබැවින් මෙහි දී විශේෂඥයන් අපට කිසි විටෙකත් පවසා නැති පරිදි “COVID-19 සඳහා ප්‍රතිකාරයක් සොයාගෙන ඇත” යන ප්‍රකාශයන් කීමෙන් අප වැළකිය යුතු යි.

මා තොරතුරු දාමය බිඳිය යුතුද? 

ඔබ ඕනෑම තොරතුරක් මත ‘forward’ බොත්තම එබූ  විට, එම  ක්‍රියාව ඔබ තොරතුරු ප්‍රභවයක් බවට පත්  කරයි. මෙයින් ඔබට විශාල වගකීමක් පැවරේ. මන්ද, අව්‍යාජ, අවිශ්වාසදායී සහ සත්‍යාපිත නොවූ තොරතුරුවලින්  ඔබ අන් අය පෝෂණය කරන්නේ නම්, ඔබ ඔවුන් නොමඟ යැවීමේ වරදට ලක් වේ. එමනිසා තොරතුරු ව්‍යප්ත කිරීමේ දී  ඔබ තුළ විශාල පාලනයක් සහ සංයමයක් තිබිය යුතු යි. එබැවින් ඔබට ලැබුණු තොරතුරු ඔබ සත්‍යාපනය කර නොමැති නම්, තොරතුරු දාමයේ බිඳුණු සබැඳිය බවට පත් වන්න!

සැලකිය යුතු ප්‍රධාන කරුණු

  • නරක සිදුවීමක් වැළකීමට පුවත වහාම දීමට හදිසියක් නැති නම්…..
    නැවතී පළමුව ඔබේ පණිවිඩය සහ මූලාශ්‍රය සත්‍යාපනය කරන්න
  • පුවත විශේෂඥයෙකුගෙන් දැයි පරීක්ෂා කරන්න…..
    නැතිනම් වෙනත් සුදුසු ප්‍රභවයක් සොයන්න
  • විශේෂඥයා කියාපාන දේ පිළිබඳව ඔහුට විශේෂඥතාව තිබේදැයි පරීක්ෂා කරන්න…..
    විෂය සම්බන්ධ විශේෂඥයන්ගෙන් තොරතුරු සොයන්න
  • “විශේෂඥ ප්‍රකාශන” ඇත්ත වශයෙන්ම විශේෂඥයාගෙන්ද යැයි පරීක්ෂා කරන්න…..
    තොරතුරුවල මූලාශ්‍රය සොයන්න
  • පුවත කාලීන දැයි පරීක්ෂා කරන්න…..
    පැරණි පුවත් සංසරණය නොකරන්න
  • පුවත්වල යම් යම් කොටස් පමණක් උපුටා නොගන්න…..
    වැරදි නිරූපණය කිරීම් වැලකීමට සම්පූර්ණ පුවත සපයන්න
  • පුවත සත්‍යයක්ද, උපකල්පනයක් පමණක්ද යැයි පරීක්ෂා කරන්න…..
    සත්‍ය තොරතුරු පමණක් සපයන්න
  • වගකීමකින් පුවත් ව්‍යප්ත කරන්න
    එය සත්‍යාපනය කරන්න…..එසේ නොවේ නම්…..තොරතුරු දාමය බිඳ දමන්න

எங்கள் நடத்தைகளை வழிநடத்த சரியான தகவல்களைத் தேடல்

கோதுமையை சப்பியிலிருந்து பிரித்தல்

ஆக்கம்

கலாநிதி ஸந்தூஷி அமரஸூரிய, மருத்துவ உளவியலாளர் மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர், மருத்துவ மானிடவியல் திணைக்களம், மருத்துவ பீடம், கொழும்பு பல்கலைக்கழகம்

தமிழ் மொழிபெயர்ப்பு

பேராசிரியை சாலினி சிறி றங்கநாதன், மருத்துவ இயல் பேராசிரியையும் குழந்தை மருத்துவ நிபுணரும், மருத்துவ இயல் திணைக்களம், மருத்துவ பீடம், கொழும்பு பல்கலைக்கழகம்

தமிழ் மொழிபெயர்ப்பு உதவி

வைத்திய கலாநிதி கார்த்தியாயினி சிவராசா


COVID-19 பரவிவரும் நிலையில் மக்கள் பல்வேறு விதமாக நடந்து கொள்வதை நாங்கள் காண்கிறோம். ஒருசாரார், இதை ஒரு மிகைத்தனமான வெளிப்பாடு என கருதி, தற்போது நடைமுறையிலுள்ளநடமாட்டத்தை கட்டுப்படுத்தும் செயற்பாட்டிற்கு அடி பணிவதை ஒரு தொல்லையாக பொதுவாக கருதுகின்றனர். இன்னொரு பகுதியினர்அதிகமனஅழுத்தத்துடன், எதிர்கொள்ளப் போகும் பேரழிவுக்கு தயாராகிவருகின்றனர். இந்த சூழ்நிலையானது தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருகிறது. சந்தேகமேயில்லாமல் இது எதை செய்யவேண்டும், எதை செய்யக்கூடாது என்று தீர்மானிப்பதில் ஒரு நிச்சயமற்ற மற்றும் குழப்பமான தன்மையை ஏற்படுத்தியுள்ளது. ஆகையால், எமது நடத்தைகளை வழிப்படுத்த எங்களிற்கு சரியான வழிகாட்டி தேவை. இதற்கா௧ நாங்கள் எங்களை வழிநடத்த சரியான தகவல்களை நாடவேண்டும். உலகளாவரீதியில் நடக்கும் நிகழ்வுகளை சில செக்கன்களில் உடனுக்குடன் அறியத்தக்க வகையில் பல தகவல் மூலங்கள் எங்கள் விரல்நுனியில் இருப்பது அதிஷ்டமே. ஆனால் இந்த தகவற் கடலில் இருக்கும் தீங்கு என்னவெனில், சில தகவல்கள் கட்டுப்பாடற்றவை. அவற்றிற்கு நாம் இரையானோமானால் நாங்கள் தவறாக வழிநடத்தப்படுவோம்.

உலகளாவரீதியில் பரவியுள்ள இந்த COVID-19 தொற்றுநோயானது (pandemic), ஏராளமான தவறான தகவல்களை உருவாக்கியதன் மூலம் ஒரு “பாரிய இன்போடெமிக்” (massive infodemic) க்கு வழிவகுத்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் விசனம் தெரிவித்துள்ளதுடன், அத்தகைய தவறான தகவல்களைக் கண்காணிக்கவும், அவற்றிற்கு பதிலளிக்கவும் கட்டுக்கதை-உடைத்தல் ஹாட்லைனை (24/7 myth busting hotline) அமைத்துள்ளது.

https://www.who.int/emergencies/diseases/novel-coronavirus-2019/advice-for-public/myth-busters

நிச்சயமற்றதும் கட்டுப்பாடற்றதுமான உணர்வை உருவாக்கியுள்ள இந்த காலகட்டத்தில்

அதற்கு ஒரு வடிவம் கொடுக்க எமது மனம் விரும்புவதால் நாமும் சில சந்தர்ப்பங்களில் இவ்வாறான தவறான தகவல் பொறிகளுக்கு இரையாகலாம். நடந்து கொண்டிருக்கும் விடயங்களிற்கு விளக்கம் தேட முற்படுதல், அனைத்தும் சரியாகிவிடும், எங்களை காப்பாற்ற நாங்கள் எதாவது செய்யமுடியும் என்ற உத்தரவாதத்தை உணர விரும்புதல், இதற்கு யார் மேலாவது பழி போடக் கூடியதாயிருத்தல், விரைவான பதில்களை பெற விரும்புதல் அல்லது எளிதாக அணுகக் கூடிய தகவல்களில் அதிக கவனம் செலுத்துதல் என்பன இதற்கு காரணமாக அமையலாம். நம்மில் சிலர், ஏற்கனவே நாம் நம்பும் நம்பிக்கைகளை உறுதிப்படுத்தும் வகையான தவறான தகவல்களை இலகுவில் நம்பி விடுவோம். இது “confirmation bias” என அழைக்கப்படுகிறது. உதாரணமாக தடிமனுக்கு மருந்தாக ஒரு குறிப்பிட்ட மூலிகையை நம்பும் ஒருவர், அதே மூலீகை COVID-19 க்கு எதிரான வினைத்திறன் உள்ளது எனக்கூறப்படுமிடத்து அதை நம்புவதற்கான வாய்ப்புகள் அதிகம். இவ்வாறான தவறான தகவல்களுக்கு மீண்டும் மீண்டும் முகங்கொடுப்பதாலோ அல்லது அத்தகைய பொய்யான தகவல் வழங்கும் மூலங்களை நாமே தீவிரமாக தேடுவதாலோ இறுதியில் நாம் அத்தகவல் உண்மை என ஏற்றுக்கொள்கிறோம்!

இது “மாயையானஉண்மைவிளைவு” (Illusory Truth Effect) எனஅழைக்கப்படுகிறது.

  1. ஒன்றில் எமக்கு மேலும் பயத்தைத் தூண்டி துயரத்திற்கு உள்ளாக்குகிறது அல்லது. தவறான உத்தரவாதம் தந்து அமைதிப்படுத்துகிறது. இரண்டாவது எங்களிற்கு பயனளிப்பது போல் தோன்றினாலும், இரண்டுமே எங்களை தவறாக வழிநடத்தி, செயற்பாடற்ற மற்றும் பயனற்ற நடத்தைக்கே இட்டு செல்லும்.
  2. அல்லது தவறான தகவல்களைப் பரப்புவதற்கு எம்மைத் தூண்டி செயற்பாடற்ற சமூக விளைவை ஏற்படுத்தும்.

நீங்களும் பயன்படுத்தி மற்றவர்களுக்கும் பரப்பும் தகவல்களின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்த உங்களிடம் நீங்களே கேட்கக்கூடிய சில கேள்விகள் கீழே தரப்பட்டுள்ளன.


‘நெருப்பை எதிர்த்துப் போராட’ நான் இத் தகவலை இப்போது பரப்பவேண்டுமா? (fight a fire)

நாஙகள் குழப்பமான செய்திகளைக் கேட்கும்போது அதை எங்களது அன்புக்குரியவர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றோம். இது வரவிருக்கும் ஆபத்துகள் குறித்த தகவல்களை பரப்புவதன் மூலம், ஏனையோரை தீங்கிலிருந்து பாதுகாக்கலாம் எனும் எமது சமூகநலன் கருதிய நோக்கத்தின் பிரதிபலிப்பாகும். இது எங்களின் பரிணாம வளர்ச்சியின் ஒரு பொறிமுறையாகும். எங்கள் இனத்தின் நிலவுகைக்கு உதவியதும் ஆகும். ஆனால் நாஙகள் பரப்பும் தகவல்கள் தவறானதாயின் இந்த போக்கு பாரிய ஆபத்தை விளைவிக்கலாம். எனவே, சில செய்திகளை எதிர்கொள்ளும்போது இந்த தகவல் பரப்பும் போக்கிற்கு உடனடியாக அடி பணிவதா அல்லது தகவலின் உண்மைத் தன்மையை சரி பார்த்தபின்னர் அதனை பரப்புவதா என்ற தீர்மானத்தை முதலில் எடுக்க வேண்டும். உதாரணமாக, சிறுவன் ஒருவன் ‘நெருப்பு’என கூச்சலிட்டு வீதியில் ஓடிவரும்போது, இந்தச் செய்தியைச் சரிபார்க்க உங்களுக்கு நேரம் இருக்காது, அதை அருகிலுள்ளவர்களுக்கு உடனடியாக கூறுவதே ஒரு விவேகமான செயலாக இருக்கலாம். எவ்வாறாயினும், உடனடி அச்சுறுத்தல் இல்லாத கட்டத்திலும், மற்றவர்கள் உடனடியாக பதிலளிக்க வேண்டிய அவசியமில்லாத கட்டத்திலும் எத்தகைய உணர்வு பூர்வமான செய்தியாய் இருந்தாலும் கூட நீங்கள் உங்களது உணர்ச்சி வேகத்தைக் கட்டுப்படுத்தி அந்த செய்தி சரியானதா இல்லையா என்பதை முதலில் ஆராயவேண்டும்.

நான் எனது தகவல் மூலத்தின் நிபுணத்துவத்தை ஆராய்ந்து பார்த்தேனா?

நீங்கள் ஒரு தகவலின் நம்பகத்தன்மையை மதிப்பிடும்போது, அதன் மூலத்தின் நம்பகத்தன்மையை முதலில் மதிப்பிடல்வேண்டும். இந்த மதிப்பீடு நீங்கள் தேடும் தகவலில் வெகுவாக தங்கியுள்ளது. உதாரணத்திற்கு உங்கள் தகவல் மூலங்களாக ஒரு குடும்பஉறுப்பினர், ஒரு ஆராய்ச்சி மேற்பார்வையாளர், ஒரு பல்கலைக்கழக பேராசிரியர் மற்றும் ஒரு தொற்று நோயியல் நிபுணரை எடுத்துகொள்வோம். உங்களது கேள்வி வீட்டிலுள்ள அத்தியாவசிய பொருட்களைப் பற்றியதெனின் குடும்பஉறுப்பினர் சிறந்த தகவல் மூலமாக இருப்பார், உங்களது கேள்வி இந்த நேரத்தில் வீட்டிலிருந்து எவ்வாறு வேலை செய்வது என்பது பற்றியதாக இருந்தால் உங்கள் ஆராய்ச்சி மேற்பார்வையாளர் அது பற்றி நன்கு அறிந்திருப்பார். ஆனால் உங்களது கேள்வி கொரோனாவின் பாதை தொடர்பான எதிர்வுகூறல்களைப் பற்றியதாக இருந்தால், மேற் குறிப்பிட்ட இருவரும், உங்களின் நலத்தை தமது மனத்தில் கொண்டிருந்தாலும் அவர்கள் கொரோனாவைரஸ் சம்பந்தமான உங்களது கேள்விற்கு சிறந்த தகவல் மூலங்கள்அல்ல. மாறாக நீங்கள் தகுதிவாய்ந்த தொற்றுநோயியல் நிபுணர் வழங்கிய தகவல்களையே இந்த கொரோனாவைரஸ் நிலைமையைப் புரிந்துகொள்ளப் பயன்படுத்த வேண்டும். அதுபோலவே இணையதளத்தில் தேடும்போதும் அவ்வலைத்தளம் நம்பகரமானதா என முதலில் பார்க்க வேண்டும் அது ஒரு அங்கீகரிக்கப்பட்ட சுகாதாரநிறுவனத்தால் பராமரிக்கப்படும் இணையதளமெனில் நம்பகரமானது. அது ஒரு கருத்து பரிமாறும் தளமாக(discussion forum) இருப்பின் நம்பகரமற்றது

“நிபுணர்” எனது கேள்விக்கான தகவலைத் தருவதிற்கு பொருத்தமான நிபுணத்துவம் உடையவர் என்பதை நான் உறுதிப் படுத்திக் கொண்டேனா? (Is he or she wearing a fitting hat?)

ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பல நிபுணர்களும் மற்றும் புகழ்வாய்ந்தநபர்களும் வெளியிடும் அறிக்கைகளையும் ஆலோசனைகளையும் நீஙகள் கேட்களாம். அதன் போது நீஙகள் கவனிக்க வேண்டியது அந்த நிபுணர்கள் தங்களிற்குரிய தொப்பியை அணிந்து தங்களின் நிபுணத்துவம் சார்ந்த அறிவுரைகளை வழங்குகிறார்களா அல்லது மற்றவர்களின் தொப்பியை அணிந்து தங்களின் நிபுணத்துவம் சாராத அறிவுரைகளை வழங்குகிறார்களா என்பதுதான். மேற்குறிப்பிட்டஉதாரணத்தில் குறிப்பிட்ட பல்கலைக்கழக பேராசிரியர் ஒரு உளவியல் பேராசிரியர் என எடுத்துக்கொள்வோம். அவரால் இப்படி ஒரு சூழலில் மக்களிடம் ஏற்படக்கூடிய உளவியல் ரீதியான தாக்கங்களைப் பற்றி கருத்து தெரிவிக்கமுடியுமேயன்றி COVID-19 இன் தொற்றுநோயியல் குறித்து கருத்துதெரிவிக்கும் நிபுணத்துவம் கிடையாது

இத் தகவல் தவறான ‘நிபுணத்துவதகவல்’ அல்ல என நான்உறுதியாக நம்புகிறேனா?

நாங்கள் சில சமயங்களில், புகழ்பெற்ற நிபுணர்களிடமிருந்து கிடைக்கப் பெற்றது என்ற போர்வையில் சில தவறாக வழிநடத்தக்கூடிய தகவல்களை எதிர்கொள்கிறோம். ஒரு நிபுணரின் பெயரின் கீழ் தகவல்கள் குறிப்பிடப்பட்டிருந்தாலும் கூட அந்த தகவலைப் பதிவு செய்திருக்கும் மூலத்தின் நம்பகத்தன்மை பற்றி நீங்கள் எப்போதும் ஆராயவேண்டும். ஒரு இணையதளமாயின் அது நம்பகரமானதா? ஒரு செய்தியாயின் அது பிரதான ஊடகங்களில் பிரசுரிக்கப் பட்டுள்ளதா? அதற்கான ஆதாரம் என்ன? நம்பகரமான ஒருவரால் வழங்கப்பட்டிருந்தால் அவருடைய ஆதாரம் என்ன? போன்றவற்றைக் கவனத்திற் கொள்ளவேண்டும். உதாரணமாக, உங்கள் பல்கலைக்கழக பேராசிரியர் இந்த சூழ்நிலையைப் பற்றி நன்கு ஆய்வு செய்து, மிகத் துல்லியமான தகவல்களையும் அதன் மூலத்தையும் பகிர்ந்திருக்கலாம். ஆனால் பலர் மூலமாகப் பகிரப்பட்டு யாரிடம் இருந்து ஆரம்பித்தது என்பதே தெரியாத நிலையில் தகவல் உங்களை வந்து சேருமானால், அந்த தகவலின் ஆரம்ப மூலத்தின் நம்பகத்தன்மையை அடையாளம் கண்டபின்னரே அதை நீங்கள் ஏனையோருடன் பகிர வேண்டும்.

தகவல் தற்போதைய காலத்துடன் பொருந்துகிறதா?

மூலத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவது மட்டுமின்றி, தகவல் தற்போதைய காலத்திற்கு உரியதா என்றும் ஆராயவேண்டும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பல வருடங்களுக்கு முற்பட்ட தொன்மையான செய்திகளும் எம்மிடையே உலா வருகின்றன. ஏனெனில் நாம் செய்திகள் எந்த காலத்திற்கு உரியவை என ஆராய்ந்து பார்ப்பதில் அவ்வளவாக அக்கறை செலுத்துவதில்லை. இச்செய்திகள் அக் காலகட்டத்திறகு உண்மையாக இருப்பினும், தற்போது காலங்கடந்த தகவலாக இருக்கலாம். எனவே, COVID-19 குறித்த நாளாந்த நிலைமை அறிக்கைகள் குறித்த நாளுக்கு மட்டுமே பொருத்தமானது, சில நாட்களின் பின் அல்ல. எனவே மற்றவர்களுடன் த௧வலை பகிர முன்னர் அந்த தகவல் பதிவான திகதியை அவதானிக்கவும்.

நான் தகவலை பிரித்து எடுத்துள்ளேனா?

எங்களிற்கு தகவல்கள் கிடைக்கப்படும்போது அவற்றிலுள்ள துன்பமான பகுதிகளிலும் மற்றும் எங்களின் எண்ணங்களுடனும் எங்களிற்கு சார்பான கருத்துகளுடன் ஒத்துப் போகும் பகுதிகளிலும் கவனம் செலுத்தும் இயல்பு எம்மிடம் உள்ளது. எனவே மற்றவர்களுக்கு நாங்கள் தகவல்களை வழங்கும்போது, சில தகவல்களை மட்டும் தேர்ந்து எடுக்கும் பொறிக்குள் விழுவதை நாங்கள் தவிர்க்க வேண்டும். ஏனெனில், அந்த தேர்நதெடுக்கப்பட்ட பகுதிகள் உண்மையாக இருந்தாலும் கூட பரந்த நோக்கில் பார்க்கும் போது அவை வேறு விதமான அர்த்தத்தை கொடுக்கக்கூடும். இது “quote mining” இனை ஒத்தது. அதாவது ஒருவரின் கருத்துகள் அதற்குரிய சூழலிற்கு பொருந்தாத இடத்தில் மேற்கோள் காட்டப்படடும் போது உண்மைகள் திரிபு படுத்தப்படலாம். நிபுணர்கள் தெரிவித்திருக்கும் விடயங்களில் பெரும்பாலான பகுதி அகற்றப்பட்டு ஒரு சிறிய பகுதி மட்டுமே மேற்கோள் காட்டப்படும் போது, அவர்கள் உண்மையிலே கூறிய விடயம் தவறான அர்த்தத்துடன் வெளிவருவதை நாங்கள் சந்தித்திருக்கிறோம். இவ்வாறு செய்வதை நாங்கள் தவிர்க்கவேண்டும், இல்லையெனில் சாதாரண தகவல்களை பரபரப்பாக்கிய குற்றத்திறகு ஆளாவோம்

நான் ஊகங்களை உண்மையிலிருந்து பிரித்திருக்கிறேனா?

COVID-19 பற்றிய பலகேள்விகளுக்கு இன்னமும் எங்களிடம் பதில் இல்லை. விஞ்ஞானிகள் அது எப்படி உருவானது, எப்படி பரவுகிறது, மற்றும் இந்த நோயினை எப்படி குணப்படுத்தலாம் என்பவை குறித்து தீவிரமாக ஆய்வுகளில் ஈடுபட்டுவருகின்றனர். இதைப்பற்றி பல அறிவு செறிந்த கலந்துரையாடல்களும் விவாதங்களும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன, தற்போது வரை சில கேள்விகளுக்கு ஊகங்களும் கருதுகோள்கள் மட்டுமே பதிலாக உள்ளன. உதாரணமாக COVID-19 க்கு குறித்த மருந்து ஒன்று பயனுள்ளதாக இருக்கலாம் என நிபுணர்கள் கருதலாம். இது இன்னும் ஊகநிலையே அன்றி உண்மைஅல்ல. எனவே, “COVID-19 க்கு சிகிச்சை கண்டுபிடிக்கப்பட்டு விட்டது” என்று நிபுணர்கள் எங்களிற்கு கூறாத தகவலைப், பரப்பாமல் நாங்கள் பொறுப்புடன்செயற்படவேண்டும்.

தகவல் பரிமாற்றசங்கிலியின் இணைப்பை உடைக்கும் ஒருவராக நான் மாற வேண்டுமா?

ஒரு தகவலை ஏனையோரிற்கு அனுப்பும் விதமாக forward பட்டனை நீங்கள் “கிளிக்” பண்ணிய தருணமே நீங்கள் ஒரு தகவல் மூலமாக மாறுகிறீர்கள். இந்த செய்கை ஒரு பாரிய பொறுப்பை உங்களிடம் சுமத்துகிறது. ஏனெனில் நீங்கள் மற்றவர்களுக்கு உண்மையற்ற, நம்பகரமற்ற, உறுதிப்படுத்தப்படாத தகவல்களை வழங்கியிருப்பின் அவர்களை பிழையான பாதைக்கு இட்டுச் சென்ற குற்றம் உங்களிடம் சுமத்தப்படும். அதாவது தகவல் பரிமாறும் தொழிலில், மிகவும் கட்டுப்பாட்டுடன் செயற்படுவதற்கு நீங்கள் பயிற்சி எடுக்கவேண்டும். எனவே நீங்கள் பெற்ற தகவல்களை உறுதிப்படுத்தமுடியவில்லை எனில், தகவல் பரிமாற்ற சங்கிலியின் இணைப்பை உடைப்பவராக மாறுங்கள்.


நீங்கள் பின்பற்ற வேண்டிய முக்கியகுறிப்புகள் இதோ……

  • அவசரமாக தகவலைப் பரப்புவதன் மூலம் பாரதூரமான ஒன்று நடப்பதை தடுக்கும் வாய்ப்பு இல்லையெனில்……
    …நில்லுங்கள். முதலில் உங்கள் செய்தியையும் அதன் மூலத்தையும் சரிபாருங்கள்
  • உங்கள் செய்தி ஒரு நிபுணரிடமிருந்து வந்ததா எனப் பாருங்கள……
    இல்லையெனில் வேறு பொருத்தமான தகவல் மூலத்தை தேடுங்கள்
  • நிபுணர் குறிப்பிட்ட தகவலில் நிபுணத்துவமுள்ளவரா என ஆராய்ந்து பாருங்கள……
    இல்லையெனில் சம்பந்தப்பட்ட துறைக்குரிய நிபுணரிடம் இருந்து தகவல்களை தேடுங்கள்
  • “நிபுணரின் செய்தி” உண்மையில் ஒரு நிபுணரிடமிருந்து வந்ததா என்பதை சரி பாருங்கள……
    நிச்சயப்படுத்த்திக் கொள்ள தகவலின் மூலத்தை கண்டுபிடியுங்கள்
  • செய்தி தற்காலத்திற்குரியதா என சரிபாருங்கள்………
    …பழைய செய்திகளைப் பரப்புவதை நிறுத்துங்கள்
  • செய்திகளின் சில பகுதிகளை மட்டும் பிரித்தெடுக்காதீர்கள்…..
    …தவறாக சித்தரித்தல், பரபரப்பை ஏற்படுத்தல் என்பவற்றை தவிர்க்க முழுமையான செய்திகளை பகிருங்கள்
  • செய்தி உண்மையா அல்லது வெறும் ஊகம் மட்டுமா என்பதை உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள்……..
    ……..உண்மைகளை மட்டுமே முன்வையுங்கள்
  • நீங்கள் அனுப்பும் செய்திகளிறகு நீங்களே பொறுப்பு…..
    …செய்திகளை உறுதிப்படுத்துங்கள்…….இல்லையெனில்……சங்கிலியை உடையுங்கள்